இந்த இசைக் கடிகாரம் ஆனது கோவில்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
இதனை கோவில்களில் பொருத்துவதன் மூலம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மணிக்கு ஒரு முறை கோவிலின் பெயர், நேரம், தேதி ஒலிக்க செய்து அதன் பிறகு அந்த கோவிலுக்கான ஸ்லோகங்கள் ஒலிக்கும் (ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்லோகம்)
மேலும் காலை நேரங்களில் அந்த நாளுக்கு உரிய நட்சத்திரம், திதி, நல்லநேரங்கள் மற்றும் முக்கிய நாட்களை தெரியப்படுத்துகிறது
கோவில் பெயர் மற்றும் தங்கள் கோவிலுக்கு ஏற்றவாறு தங்கள் விரும்பும் நேரத்தில் ஒலிக்கும் படியும் செய்து தருகிறோம்.
மின்சாரம் இல்லை என்றாலும் இசைக்கடிகாரத்தின் நேரம் அதனுல் பொருத்தபட்டுள்ள பேட்டரி மூலம் ஓடிக்கொண்டு இருக்கும், மின்சாரம் எப்போது வருகிறதோ, அந்த சரியான நேரத்தில் ஒலிபரப்பு ஆரம்பம் ஆகிவிடும்
இதை பொருத்துவதற்கு கோவிலில் ஆம்பிளிபையர் மற்றும் ஒலி பெருக்கிகள் பாடும் நிலையில் இருக்க வேண்டும்
அம்ப்ளிபையருக்கு பவர் இந்த இசைக்கடிகாரத்தின் மூலம் செல்வதால் நேரம் சொல்லும் நேரத்தில் மட்டும் அம்ப்ளிபையர் ON ஆகும், மற்ற நேரத்தில் OFF நிலையில் இருக்கும். எனவே அம்ப்ளிபையர் எப்போழுதும் ON நிலையில் இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை.
மேலே குறிப்பிட்ட அம்சங்கள் இந்த இரண்டு மாடல்களிலும்
அடங்கும்
Advanced மாடலில் கூடுதலாக இரண்டு அம்சங்கள் உண்டு அவை:
1. கோவிலில் உள்ள லைட்டுகளை இதனுடன் இணைத்து குறித்த நேரங்களில் தானாகவே ON மற்றும் OFF செய்துகொள்ளலாம், இதில் அதிகபட்சமாக 300watts வரை பயன்படுத்தலாம்
2. மார்கழி மாதத்தில் காலை மற்றும் மலையில் USB மூலம் தானாகவே பாடல்கள் ஒலிக்க செய்துகொள்ளலாம்
இதை பொருத்துவது மிகவும் எளிமையானது தான், ஆகையால் தங்களே இதை அம்ப்ளிபையருடன் பொருத்திகொள்ளலாம், அட்வான்ஸ் மாடலில் லைட் இணைப்பதற்கு தகுந்த எலக்ட்ரீசியன் அழைத்துகொள்ளவும், எந்த சந்தேகங்கள் இருந்தாலும் நாங்கள் போன் அல்லது வீடியோ கால் மூலமாக நிவர்த்தி செய்கிறோம்
இந்த இசைக்கடிகாரத்திற்கு ஒரு வருடம் உத்திரவாதம் உண்டு, ஒரு வருட
காலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் எங்களிடம் அனுப்பி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் சரி செய்து
கொள்ளலாம். அதன் பிறகும் தகுந்த கட்டணத்துடன் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.
Sample Audios
விநாயகர் கோவில் :
அம்மன் கோவில் :
சிவன் கோவில் :
பெருமாள் கோவில் :
இந்த இசைக்கடிகாரத்தை வாங்குவதற்கு தங்களின் கோவில் பெயரை எங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்ப வேண்டும் அதோடு முன்பணமாக ₹1000 (GPAY or Bank A.C)க்கு செலுத்தவேண்டும். நீங்கள் அனுப்பிய அடுத்தநாள் தங்கள் கோவிலுக்கான ஒலி பதிவு உங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிவைக்கப்படும், தாங்கள் அதை சரிபார்த்து பிறகு இசைக்கடிகாரத்திற்கான மீத தொகை செலுத்தினால் இசைக்கடிகாரம் தாங்கள் குறிப்பிடும் முகவரிக்கு கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்படும்
இதில் உள்ள தமிழ் பஞ்சாங்கம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளவேண்டும், அதற்கு இசைக்கடிகாரத்தை எங்களிடம் அனுப்பியோ அல்லது எங்களிடம் இருந்து பைல்களை பெற்று தாங்களாகவோ பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த பதிவேற்றம் ஒரு முறை மட்டும் கட்டணமின்றி செய்து தருகிறோம், அதன் பிறகு ரூ.500 செலுத்தவேண்டும். இந்த பதிவேற்றம் செய்யாத நிலையில் பஞ்சாங்கம் சொல்வது மட்டும் இருக்காது, மற்றபடி நேரம் மற்றும் ஆங்கில தேதி வழக்கம் போல் ஒலிக்கும்.